உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வெள்ளியங்காட்டான் கவிதைகள்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மனமாற்றத்திற்கு உதவும் என்ற அவருடைய எதிர்பார்ப்பு. அனைத்தும் புதைந்து போய் விட்டதைக் காண நான் வந்தேன்.

       தராசுத் தட்டோடு பழைய பேப்பர்காரன்
       குவிந்து கிடந்த புத்தகக்குவியல் கிழிக்கப்பட்டு
       கிழிப்பதற்காகவே நான் அழைக்கப்பட்டு
       திகைப்பும், கலக்கமும் கண்ணிராய் வர

அப்பா சிரித்தார் ! “எதற்காக அம்மா நீ அழவேண்டும் ? ஒரு காசு செலவில்லாமல் நம் கவிதைகளுக்கு விமர்சனமும், விளம்பரமும் கிடைக்கப் போகிறது. கடையில் சுண்டலோ, கடலையோ வாங்கிக் கொறிப்பவன் சும்மா கொறிப்பானா? நம் கவிதைகளைப் படித்துச் சுவைத்துக் கொண்டல்லவா கொறிப்பான்? ஆகா! என்ன அருமையான கவிதை எனப் பாராட்ட மாட்டானா? அடுத்து வரும் கவிதைத் தொகுப்பு சக்கை போடு போட்டு விற்பனையாகப் போகிறது பார். நீ அட்டைப் படங்களை கிழித்து கொடு" என்றவர் கிலோ ஆறணாவிற்கு அவைகளை விற்ற கொடுமையைக் கண்ணிரோடு காண வேண்டியதாயிற்று.

       உண்மையுள்ளவர்களுக்குக் கவலைகள் இல்லை.
       அறிவிற் சிறந்தவர்க்குத் தயக்கமில்லை.
       உள்ளத்துணிவு உள்ளவர்க்கு அகத்தில் அச்சம் இருக்க
       இடமே இல்லை, என்ற பழமொழி இவர்களைப்போன்றவர்
      -களுக்காகத்தான் கூறப்பட்டதோ?

தாய் தந்தையோடு கூடிய அட்டைப் படங்கள் திகு திகு வென்று மனதைப் போலவே எரிந்து சாம்பலாயிற்று. நெஞ்சம் கனக்க என் மூச்சை இழுத்து உள் வாங்கிக் கொள்கிறேன். எதிரே இருள் பரவிக் கிடந்தது.

       அடிமையாக மாட்டேன் - எவர்க்கும்
       அடிமையாக மாட்டேன்.
       கொடுமை கோடி செய்து என்னைக்
       கொன்றுவிட்டபோதும்...

என நெஞ்சு நிமிர்த்திய கவிஞன், தேவைக்கு மேல் பிறந்த

48