பக்கம்:வெள்ளியங்காட்டான் கவிதைகள்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



கேட்டேன். "அப்பா ! நானும் வேலைக்குப் போகிறேனே". என்று. "வேலைக்கா? நீயா? எங்கே போவாய்?"

மூன்றாண்டு படித்த அப்பாவிற்கு ஒரு நாளைக்கு ஒரு ரூபாய் சம்பளத்திற்கு வேலை கிடைத்தபோது எனக்குக் கிடைக்காதா என்ன?

அப்பா என்னை ஏறிட்டார்.

"பக்கத்து விட்டுப் பெண்போகிறாளே, அவளோடு போகிறேன்".

"அது தான் என்ன வேலைக்கு என்று கேட்கிறேன்".

" கட்டிட வேலைக்கு. சித்தாளாக"

என் தாயின் மரணமோ, வறுமையின் கொடுமையோ, எதிர்கொண்ட தோல்விகளோ, இருபது கிலோ மீட்டர் நடையோ, மூட்டைபூச்சிகளின் கடியோ, எதுவுமே அசைக்க முடியாத அவரின் இதயத்தை என் சொற்கள் நொறுக்கிப் பிழிந்திருக்கவேண்டும். அதன் கடினமான வலியின் வேதனையை அவரின் கண்களில் காண நேர்ந்தது.

அதன் பின்பு நூற்பாலையில் எனக்கு வேலை கிடைத்தது. ஆனாலும் அதிலும் ஒரு நாள் கரிநாளாக-

என் சகோதரியிடம் நான் சொன்னேன்." அக்கா இந்த நூலில் என் புடவையைத் தைத்து தா" என்று.

"இந்த நூல் ஏது ?"

"நூல் கண்டிலிருந்து சிக்கலான நூலை உருவி எடுப்போம். அப்போது வீணாகும் நூல் தான் இது. புடவையைத் தைக்கச் சிறிது நூலை விரலில் சுற்றிக் கொண்டு வந்தேன்."

என் தந்தையின் செவியில் இது விழுந்திருக்க வேண்டும்.

" இங்கே வா அம்மா!" என்றார்.

வயிற்றில் ஏதோ உருண்டது. கால்கள் பின்னின.

"என்ன சொன்னாய். வீணாகும் நூல் என்றா?"

தலை தானாக அசைந்தது.

சரி தான் ! நீ செய்தது ரொம்பச் சரி. ஆனால் காலையில்

50