உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வெள்ளியங்காட்டான் கவிதைகள்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஆழ்மன வெளிப்பாடுகள் தீவிரத் தன்மையுடன் இயங்குகின்றன. இப்படியான சூழலில் மரபுக் கவிதைகளின் தொகுப்பாக வெள்ளியங்காட்டான் கவிதைகள் என்ற நூலை உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன். எனது தாத்தாவுடன் நான் இருந்த நாட்களின் இலக்கியப் பகிர்வுகள் இன்னும் என்னுள் அலை எழுப்பிக் கொண்டே இருக்கின்றன. அவரது கவிதைகள் மனதை விசாலப்படுத்தும் நெறி சார்ந்த விழுதுகளின் தொடர்ச்சியாகும். அவரது வாழ்க்கையும் இலக்கியமும் இரண்டறக் கலந்தவை. கவிஞரின் எல்லாப் படைப்புகளையும் தமிழ் மக்களுக்குத் தொடர்ச்சியாக வழங்க இருக்கிறேன். அதன் முன்னோட்டமே வெள்ளியங்காட்டான் கவிதைகள்.

இந்நூல் ஒரு காலக் கவிஞனின் ஐம்பது ஆண்டு யாத்திரையின் - இலக்கியப் பகிர்வின் சில பக்கங்களை இதனுள் பயணிக்கிற போது அதன் அனுபவத்தை நீங்களும் உணர்ந்து மகிழ விழைகிறேன்.

அன்புடன்
மகேந்திரன்