பக்கம்:வெள்ளியங்காட்டான் கவிதைகள்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



நோயின் கொடிய வலி -
பசியில் புரண்டு துடிக்கும் வயிறு
வலுவிழந்து தள்ளாடித் தடுமாறும் கால்கள் -

என ஒவ்வொரு நாளும் அவர் அந்தக் கூப்பிடு துரத்தைக் கடக்க, எத்தனை முறை உட்காரவேண்டியிருந்தது மீண்டும் எழுந்து நடக்க எவ்வளவு துன்பப்பட வேண்டியிருந்தது. என்பதை இன்றும் அங்கு உள்ளவர்களிடம் நீங்கள் சென்று வினவுவீர்களேயானால் அந்த உண்மை உங்களை நெக்குருக வைக்கும்.

தமிழ் மக்களின் நலனில் அவர்களின் விழிப்புணர்வில், அந்த மா... மனிதன் தன் உயிரையே துச்சமாக மதித்து, தன் எழுத்துப் பணியைத் தொடர்ந்தார். ஆனால் அந்த எழுத்துகளும் அவரைப் போலவே இன்றும் உறங்கிக் கொண்டிருக்கிறது என்ற உண்மையின் கசப்பை நான் யாரிடமும் சொல்ல?

ஒரு தேசத்தின் தலைவனாக இருப்பதைக் காட்டிலும், சத்தியத்திற்கு அடிமையாக இருப்பதையே மிகவும் விரும்புகிறேன், என்ற அந்தப் பொன் மொழிக்கேற்ப வாழ்ந்தார்.

"சகோதரி! அப்பாவின் கையெழுத்துப் பிரதிகளைப் பத்திரமாகக் காப்பாற்றி வை ! அதுவே நீ இந்த நாட்டுக்குச் செய்யும் பேருதவியாகும்" என்ற என் சகோதரனின் வார்த்தைகள்! அண்ணாவுக்கு ஆங்கில இலக்கியங்களில் நல்ல ஆர்வமிருந்தது போலவே தமிழிலும் பேச்சாற்றலில் சிறந்து விளங்கினார்.

மாணவர்களுக்குப் பெரியோர்களின் கருத்துக்களை வேடிக்கையாகச் சொல்லி விளக்குவதில் கை தேர்ந்தவர். அவரின் வகுப்பு என்றால் மாணவர்களுக்கு மிகவும் குதுகலமாக இருக்கும் என்று சொல்லக் கேட்டிருக்கிறேன்.

கோவையில், சி.ஏ.பாலன், எல்.ஜி.கீதானந்தம் அவர்களோடு ஜெயகாந்தன் அவர்களும் எங்கள் வீட்டுக்கு வருகைதந்திருந்தார்கள். பாரதிக்குப் பின் தேசப்பற்றோடு பாட ஒரு கவிஞன் இல்லை என்ற போது, என் தந்தையின் பாடல்களைக் கூறி அவரை வியப்படைய

59