பக்கம்:வெள்ளியங்காட்டான் கவிதைகள்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வைத்ததாக அண்ணா கூறக் கேட்டிருக்கிறேன். இன்று அப்பாவின் கவிதைகளை எடுத்துக் கூற அண்ணாவும் இல்லை என்பது ஒரு பேரிழப்பே.

வாழ்வாங்கு வாழ்ந்த என் தந்தையின் உழைப்பு, விருப்பு, விடுதலை வேட்கை அனைத்தும் விழலுக்கு இறைத்தநீராய் வீணாகி விடுமோ என நினைத்து நான் துயருற்றேன். ஏறக்குறைய அரை நூற்றாண்டு கடந்துவிட்ட நிலையில் நம்பிக்கை இழந்து நின்ற என்னை புவியரசு எனும் கவிஞர், சகோதரராக நின்று நீர் வார்த்து உயிர்ப்பித்தார். நன்றி எனும் ஒரு ஒற்றைச் சொல் அதை நிறைவு செய்து விடாது. என் ஆன்மாவின் குரலாக அது என்றும் ஒலிக்கும்.

"குழந்தாய் !

என் அனுபவங்கள் என்னை அப்போதைக்கு அப்போது செலுத்திக் கொண்டு செல்வதில் இருந்துநான் எப்படியும் ஒதுங்கிநிற்க முடியாது. எனக்காகவும் சரி, மற்றவர்களுக்காகவும் சரி இவற்றைப் புறக்கணித்து விட்டு, உயிர் வாழ்வதில் பயன் இருப்பதாக என்னால் நினைக்க முடியவில்லை. என் மனதில் அச்சம் எப்போதேனும் தோன்றுகிறது என்றால் என் கொள்கைகளைப் புறக்கணிக்க எண்ணும் நிர்ப்பந்தம் ஏற்படும்போது மட்டுமே" எனப் பேசும் தந்தை.

'தமிழ் வளராதா? தமிழ் உணர்வை மக்கள் பெற மாட்டார்களா? தமிழ் உணர்வு மக்களை ஒன்றுபடுத்தாதா? என்ற ஆழமான ஆதங்கமான உணர்வு பூர்வமான, இக்குரல், சென்ற முதல்வராயிருந்த கலைஞரின் குரலே! சிங்காநல்லூரில் நடைபயின்று. அவர் திரைக்கதை எழுதிய, அந்தக் காலகட்டத்தில் எங்கள் குடியிருப்பும் அங்குதான் இருந்தது. ஆனால் இன்று நான் கலைஞரைச் சந்திக்க இயலுமா? கொடிசியாவில் நிகழ்ந்த நிகழ்ச்சியில் என் தந்தையின் இரண்டு கவிதைத் தொகுப்புகள் அவரிடம் சேர்க்கும்படித் தரப்பட்டன. ஆனால் ...?

கலைஞரின் சமகாலத்தில் வாழ்ந்த ஒரு கவிஞரைப் பற்றி, தமிழைச் செம்மொழியாக்கப் பாடுபடும் இந்த நேரத்தில் இக்கவிஞனைக் கண்டு கொண்டு, அவரின் கவிதைகளைப் பற்றிய தம்

60