பக்கம்:வெள்ளியங்காட்டான் கவிதைகள்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

குழம்பை சுமந்து கொண்டு.

முகவுரையைப்படிப்பவர்கள் கவிஞனையும்படியுங்கள். காலம் அவன் மீது ஏற்றிய சுமையையும், அவன் இதயத்தையும் படியுங்கள். உங்கள் கருணை நிறைந்த உள்ளத்தால் அவரை அளக்க முடியுமானால் அதுவே நீங்கள் அவருக்குத் தரும் மிக உயர்ந்த பரிசாகும்.

உண்மையை அடிப்படையாகக் கொண்டு ஆன்மாவோடு இணைந்து வரும் சொற்கள் ஜீவன் உள்ளது. மட்டுமல்ல, அவை என்றும் உயிர் வாழ்வதற்கு உரியதும் கூட . தாமஸ் கிரே என்ற அறிஞர் கூறியது போல. " ஆழ்கடலுக்குள் எத்தனையோ ஒளி மணிகள் புதைந்துக் கிடக்கலாம். காட்டில் மலர்ந்த எத்தனையோ வண்ண மலர்கள் முகர்வாறின்றி வீணாகலாம். அதுபோல, எத்தனையோ கவிஞர்களும், கலைஞர்களும் ஏழைகளாய்ப் பிறந்து விட்ட ஒரே காரணத்தால் விளம்பரம் இன்றிப் பாராட்டுவாரின்றி உலகுக்குத்தெரியாமல் மறைந்துபோகிறார்கள். அவர்தம் ஆற்றல்கள் உலகுக்கும் பயன்படாமல்போய்விடுகிறது" என்ற உண்மை சுடுகிறது.

நம் இலக்கியங்கள் உண்மையான சரித்திரச் சான்றான இலக்கியங்கள். வீரமும், தீரமும் கருணையும் கொடையும் கொண்ட நம்முன்னோர்களின் வாழ்க்கைச்சிறப்பையும் வாழ்வாங்கு வாழும் வகையைக் கூறும். வள்ளுவம், புறநானூறு போன்ற உண்மை வரலாற்றை நம் மக்களுக்கு நாம் முறையாகப் போதித்திருந்தால் ஒரு இலக்கிய வாதியின் இதயத்தில் இருந்து இப்படி ஒரு வார்த்தை பிறந்திருக்க முடியாது.

'மனிதனுக்கும் மிருகத்திற்கும் பசியும் காதலும் ஒன்றே. ஆனால் மனிதனை வேறுபடுத்துவது அவனது ஆன்மா, அதுவும் இருபதாம் நூற்றாண்டில் மரண வழியைப் பார்த்துச் சென்று கொண்டிருக்கிறது'.

என் தந்தை 'வெள்ளியங்காடு' என்ற கிராமத்தில் பிறந்ததால் வெள்ளியங்காட்டான் என்ற பெயரில் கவிதைகளை எழுதத்தொடங்கினார். அவரது இயற்பெயர் என். இராமசாமி என்பது.

64