பக்கம்:வெள்ளியங்காட்டான் கவிதைகள்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
முன்னுரை


அவன் ஒரு கவிஞன். கவிஞனுக்கும் உள்ளம் என ஒன்றுண்டு. மற்ற மனிதரைக் காட்டிலும் கவிஞனின் உள்ளம் உணர்ச்சி வசப்படுவது; சத்தியத்திலும் சமத்துவத்திலும் பற்றுடையது. இது இயல்பு.

இந்த உணர்ச்சி அறிவு, அன்பு, ஆற்றல், ஒழுக்கம், இன்பம் போன்ற பல்வேறு பண்புகள் கவிதைகளாகி வெளிப்படும்போது சராசரி மனிதன் அவனைவிட்டு விலகுகிறான். வெறுத்து ஒதுக்குகிறான். ஒரு அறிவறியாச் செல்வனை அண்டி வாழ்வதினின்றும் ஒதுங்கி விடுகிறான்.

உண்மை - மூடனுக்கு என்றும் இனிக்காத ஒன்று. கவிஞனுக்கு அது உயிர் போன்ற ஒன்று. எனவே, கவிஞன் -உண்மையை விட முடியாதவனாகிறான். வாய்மைக்கு மாறாகிய ஒரு கவிஞன்; அவன் மொழி இயலில் எத்துணை ஆற்றல் பெற்றிருப்பனும் அவனுடைய பாடல் பயனற்றதாகி விடும். சாதுர்யமான கற்பனை உவமைகள் சுவைக்க உதவுமேயொழியப் படிக்கும் மனிதனுக்கு அது பற்றுக்கோடாகாது. இது மறுக்க இயலாத (மூட) உலகம் புரிய மறுக்கும் ஒரு அடிப்படை உண்மை.

66