பக்கம்:வெள்ளியங்காட்டான் கவிதைகள்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கவிஞர் வெள்ளியங்காட்டான்


கூட்டியெறி

கூட்டியெறியடா கூட்டியெறி-கூடும்
குப்பைகூளங்களைக் கூட்டியெறி !
நாட்டு நலந்தனில் நாட்டமில் லாச்சுய
நாயகக் குப்பையைக் கூட்டியெறி !
வீட்டில் வெறுமை விதிப்பயனேயெனும்
வேதியக் குப்பையைக் கூட்டியெறி !
கூட்டியெறிந்திடக் கூசிடின் நாடொரு
குப்பைமே பாய்விடும் கூட்டியெறி !

கூட்டியெறியடா கூட்டியெறி-கூடும்
குப்பை கூளங்களைக் கூட்டியெறி !
பாட்டைப் பண்பாடு பயந்திடப் பாடாத
பாவலர் குப்பையைக் கூட்டியெறி !
ஏட்டில் இதயத்தியல்பெழுதாத
எழுத்தாளர் குப்பையைக் கூட்டியெறி !
கூட்டியெறிந்திடக் கூசிடின் நாடொரு
குப்பைமே பாய்விடும் கூட்டியெறி !

கூட்டியெறிடா கூட்டியெறி - கூடும்
குப்பைகூளங்களைக் கூட்டியெறி !
பட்டாளி மக்களைப் பட்டினி போடும்
பகாசுரக் குப்பையைக் கூட்டியெறி !
கூட்டாளி யாகிக் குடியைக் கெடுக்கிற
கொண்டுணிக் குப்பைக் கூட்டியெறி !
கூட்டியெறிந்திடக் கூசிடின் நாடொரு
குப்பைமே பாய்விடும் கூட்டியெறி !

75