பக்கம்:வெள்ளியங்காட்டான் கவிதைகள்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வெள்ளியங்காட்டான் கவிதைகள்



அன்பிலா அறிவு மில்லா
அதிகாரி யாயா தித்தன்
முன்பிலா முறையில் மூண்டு
முகந்தெரி சொரியின், முற்றும்
என்பிலா - விரைந்து செல்லும்
இயல்பிலாப் புழுவுங் கூடத்
துன்பிலாப் புதரில் பூதத்
தொடங்குதல் தொன்மைத் தன்றோ?

போற்றுவாரின்றிப் பொல்லார்,
புரட்சிசெய் கின்றான் என்றே
தூற்றுவாரேனும், நானும்
துணிந்தின்று தொடங்கித் தொட்டுத்
தேற்றுவாரின்றித் தீராத்
திக்கற்றோர் துயரம் தீர
மாற்றுவோ னாதற் கேற்ற
மனத்திட்ப முற்றேன் மன்னோ !




அரைக்கால் பொய் கால்பொய்
அரைப்பொய் அனைத்துமே
நிறைக்காதீர் நேமிநேர் என்னக்
-குரைக்கும்
முழுப் பொய்யில் வீழ்ந்துகண்
மூடியநம் நாடு
விழிப்பெய்தல் என்று விடிந்து?

94