இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
4 வங்க நாட்டுக்கு அழைத்துச் சென்றேன். அவர் தம் வாக்குகளே இந்நூலே உருவாக்கிற்று என் பதைப் பயில்வோர் அறிவர். விழா முடிவில் இந்நூலை விரைவில் கொணர விரும்பிய சங்கத் தாரின் உணர்வை அறிந்தேன்; முடிப்பன முடித் தேன். இன்று இந்நூல் இந்த வடிவில் வெளி வருவதற்கு ஊக்கிய பாரதி தமிழ்ச் சங்கத்தாருக்கு என் நன்றி. அவர்தம் தமிழ்த் தொண்டு தழைப்ப தாக! செல்லும் இடமெல்லாம் தத்தம் பல் வேறு பணிகளுக்கிடையில், ஒல்லும் வகையில் அன்னத் தமிழுக்கு ஆக்கப் பணி புரியும் அனே வருக்கம் என் வணக்கம் நன்றியும் உரியன. @ i தமிழ்க்கல் இல்லம், ! சென்னை -30 s அ. மு. பரமசிவானந்தம் 24-3-66 |