உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வெள்ளிவிழாச் சொற்பொழிவுகள்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. தொல்காப்பியர் காட்டும் வாழ்வியல் வாழ்வுக்கும் மொழிக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. ஆதி மனிதன் ஒருவேளை மொழியற்று விலங்கொடு விலங் காகப் பேச்சற்று வாழ்ந்திருக்கக்கூடும். இன்று மொழியின் றேல் மனித வாழ்வு இல்லை என்ற நிலையில்தான் நாம் வாழ் கின்ருேம். எனவே மொழியும் அதன்வழி எழுந்த இலக்கிய இலக்கணங்களும் மனித வாழ்வின் கண்ணுடி எனலாம். உலகில் எத்தனையோ மொழிகள் தோன்றி வாழ்ந்து மறைந் தன. தமிழும்-தோன்றிய கால எல்லையைக் கணக்கிட முடியா விட்டாலும், அத்தொன்மைக்குத் தொன்மையான மொழிஇன்றும் புதுமைக்குப் புதுமையாய்ப் புத்தொளி கொண்டு வாழ்வதைக் காண்கின்ருேம். - தமிழில் மிகப் பழங் காலந்தொட்டுப் பல்வேறு இலக்கி யங்கள் தோன்றியுள்ளன. இலக்கியங் கண்டதற் கிலக்கணம் இயம்புதல் மரபாதலின் பல இலக்கண நூல்களும் எழுந்தன. தொல்காப்பியர் காலம் சுமார் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன் என்பர். கடைச் சங்க காலத்திற்கு முற்பட்டது என் பதில் யாருக்கும் ஐயமில்லை. இஃது ஒர் இலக்கண நூல். இவ்வாருய தெளிந்த இலக்கண நூல் தோன்ற வேண்டு மால்ை அதற்குமுன் எத்தனையோ ஆயிரமாயிர மாண்டு களுக்கு முன்பே தமிழ்மொழி செம்மையுற்றிருக்க வேண்டும்.