பக்கம்:வெள்ளை யானை.pdf/10

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
முருகுசுந்தரம் 20

விடலைக் கனவுகள்
அவன் கற்பனையையும் மீறித்
தானாக விழுந்த
சிருஷ்டி அதிசயம்.
அரம்பையர்
அணிவகுப்பின் மீது விழுந்த
அதிரடித் தாக்குதல்.

தவசிகளின் சலனம்;
தபோவனத்தின்
கண்தாகம்;
பற்றற்றார் பற்று.
சுற்றியெரியும்
ஓமகுண்டத்தின் உச்சியில்
மெலிதாக அசைந்தாடும்
நீலநிறத் தீக்கொழுந்து.

மூவுலகிற்கும்
ஆவலுாட்டும்
காம....தேனு.

அவள்தான் அகலிகை!
முக்தல முனிவரின்!
முற்றிய தவப்பயன்!

ஆசிரமத்தைத் தேடி
எத்தனையோ
அதிதிகள் வருவதுண்டு.

இந்திரனின் ஐராவதத்தையும்
சந்திரனின் ஒளிவட்டத்தையும்
ததீசியின் கூன்முதுகையும்
துர்வாசரின் முரட்டுத் தாடியையும்