பக்கம்:வெள்ளை யானை.pdf/11

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
21.வெள்ளை யானை
 

குழந்தையின்
குறு குறுப்போடு பார்ப்பாள்.

காம தேனு
கற்பகத் தரு
சங்கநிதி
பதுமநிதி வரிசையில்
இடம்பெற வேண்டிய ஏதோ ஒன்று,
தவறிப் போய்
இடம் மாறி
தபோவனப் புழுதியில்
கிடப்பதாக
இந்திரன் கணிப்பு.
அவள் மனத்திலும்
ஒரு சிணுக்கு -
அவிழ்க்க முடியாதபடி,

தோழியர்களின்
ஆரவாரக் குரல்
அகல்யாவின்
பிரம்மையைக் கலைத்தது.

'அகலிகை!
உன் காதுக்குக்
கரும்பான சேதி!
நாளை-
உனக்குச் சுயம்வரம்'
என்றனர் தோழியர்