பக்கம்:வெள்ளை யானை.pdf/12

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
2.சுயவர காண்டம்

முக்தல முனிவர்
ஆசிரமத்தில்
விழாக் கோலம்.

ஒருபக்கம்
இறு மாப்பு -
இந்திராதி தேவர்கள்.

மறுபக்கம்
பரபரப்பு-
மகுடம் தரித்த
மண்ணின் மைந்தர்கள்.

இன்னுமோர் பக்கம்
ஏக்கப் பெருமூச்சு -
காவி குறுந்தாடியோடு
கமண்டலக் கூட்டம்.

ஆம்...
இதுவோர்
மும்முனைப் போட்டி.

சேடிகள் புடை சூழ
வசந்த விழாக் காணும்