பக்கம்:வெள்ளை யானை.pdf/14

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முருகுசுந்தரம்.24


விருப்பத்தைக் கேட்டா
பரிசளிப்பு நடை பெறுகிறது!

ஓட்டப் பந்தயங்களை
ஒழுங்காக வென்றவர்
எவருமில்லை.

அன்று -
அர் கொனாட்ஸ்
ஆனை முகப் பிள்ளையார்.
இன்று -
கெளதமன்.

குறுக்கு வழியில் வென்ற
இந்தப்
பெருந்தாடிப் பென் ஜான்சனைத்
தகுதி நீக்கம் செய்ய
யாருக்கும் துணிச்சலில்லை.

தந்தை தாரை வார்க்கத்
தலைநிமிர்ந்த
கோலமயில் எதிரில்,
தலைவிரித்துக்
குலை சரிந்த
ஈந்தாகச்
சடா முடியோடு
தாடிக் கெளதமன்.

அவள் அடிமனத்தில்
அவிழ்க்க முடியாத
அநேக முடிச்சுகள்!