பக்கம்:வெள்ளை யானை.pdf/18

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
முருகுசுந்தரம் 28

அவசர அவசரமாய்ப்
பூசைக்கு வேண்டிய
சமித்தும் தர்ப்பையும்
மலரும் சேகரம் செய்துகொண்டு,

உடம்போடு ஒட்டிய
ஈரப்புடவையின் சரசரப்பு
காலைத் தபோவனத்தின்
கவனத்தைக் கலைக்க,

காயத்ரி மந்திரத்தை
முணுமுணுத்த வண்ணம்
நடந்து வந்தாள் அகலிகை.

காலைக் கடன்களையும்
கதிரவன் வணக்கத்தையும்
முடித்துக் கொண்டு
கமண்டல தாரியாய்ப்
பர்ணசாலையின் முகப்பில்
திரிவிக்கிரமனைப் போல் நின்ற
கெளதமன் முன்னால்
மண்டியிட்டு வணங்கினாள்.

'தீர்க்க சுமங்கலி பவ!' என்று
கெளதமன் வாழ்த்த
‘என் பாக்கியம் சுவாமி'
 என்று -
பணிவோடு சொன்னாள் அகலிகை.

ஓமகுண்டம்
நாம சங்கீர்த்தனம்