பக்கம்:வெள்ளை யானை.pdf/21

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


31 O வெள்ளை யானை அவளுக்குத் தன்னையிழந்த தவிப்பு. Ll l ஒருநாள் காடடில சமித்துகள் பொறுக்கிக் கொண்டிருக்கும்போது வானத்தில் சிறகு முளைத்த வெள்ளை யானையொன்று பறந்து வரக் கண்டாள். கவையாகப் பிரிந்த நவமணிப் பூணிழைத்த நான்கு கொம்புகள், ஒவ்வோர் அசைவிலும் கம்பீரமான ஆண்மையின் மதர்ப்பு. அவளையும் அறியாமல் அகலிகை ஒரு பிடியாக மாறிக் கொண்டிருந்தாள். கவுள்களில் நாணம் வழியக் குனிந்த தலையோடு குடை ராட்டின மாகத் தன்னைத் தானே சுற்றிக் கொள்ள வெள்ளை யானை அவளைச்சுற்றிப் பறந்து வந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வெள்ளை_யானை.pdf/21&oldid=916235" இருந்து மீள்விக்கப்பட்டது