பக்கம்:வெள்ளை யானை.pdf/25

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


35 O வெள்ளை யானை சென்ற சிறிது நேரத்தில் திரும்பி வந்தான். வேதனை விழிப்பில் புரண்டு கொண்டிருந்த அகலிகை வியப்போடு பார்த்தாள். அகல்யா! கரையுடைக்கும் வெள்ளம் கால நேரம் பார்ப்பதில்லை!" என்று சொல்லி அவளைத் தொட்டான். கணவன் கைபட்டால் கட்டையாகக் கிடக்கும் அவளுடம்பு இன்று - நாணை வளைத்துவிட்ட வில்லாக அதிர்ந்து நிமிர்ந்தது. முறுக்கேற்றப்பட்ட வீணை நரம்புகள் மீது விரல் - தவறி விழும்போது ஏற்படும் அபகரமாக அவளுக்குள் கொந்தளிப்பு. வந்த அந்தக் கெளதமன் மெதுவாகச் சிரித்தான். அந்தச் சிரிப்பு. இடியுடன் கூடிய மின்வெட்டாக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வெள்ளை_யானை.pdf/25&oldid=916242" இருந்து மீள்விக்கப்பட்டது