பக்கம்:வெள்ளை யானை.pdf/26

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
முருகுசுந்தரம் 36

அவள்-
நினைவில்
பளிச்சிட்டது.

'இந்திரன்!
ஐராவதத்தை
ஆரோகணிக்கும் இந்திரன்!!

அமரர் தலைவனே என்னைத் தேடி.!!!'.

அகல்யாவின்
பேரழகுப் பெருமிதம்
கொக்கரித்து மேலெழும்பியது.

நீண்ட நேரம்
புகைந்து கொண்டிருந்த
அவள் ஓமகுண்டத்தில்
இந்திரன் -
நெய்யாக இறங்கினான்!
குப்பென்ற ஜுவாலை!

தான் ஓர்
அருவியாக மாறி,
பாறையில் மோதி,
சுழலில் சிக்கி,
கற்களைப் புரட்டிக் கொண்டு
அதல பாதாளத்தில் தலைகுப்புற
விழுவதாகவும்
கைதேர்ந்த போர்வீரன்
தன்மீது சவாரி செய்யக்,
கடிவாளம் இல்லாத குதிரையாய்க்
காற்றெனப் பறப்பதாகவும்,
அவள் உணர்ந்தாள்.