பக்கம்:வெள்ளை யானை.pdf/29

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

39 வெள்ளை யானை

"சுவாமி! கொஞ்சம் பொறுங்கள்!
என் தவறு
இச்சை கலந்த
அனிச்சைச் செயல்;
திருமணம் ஆன
நாளிலிருந்து
என்னையும் அறியாமல்
இரண்டு வாழ்க்கை
வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.
இந்த விலாங்கு வாழ்க்கை
எனக்கு வேண்டாம்.

உங்கள் கையில்
இதுநாள் வரை
நான் கல்தானே?

இப்போதும்
நான் கல்லாக
அனுக்கிரகம் செய்யுங்கள்"
என்று வேண்டினாள்.

அகலிகை
கல்லானாள்.