பக்கம்:வெள்ளை யானை.pdf/30

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

5.உத்தர காண்டம்

“மரத்துப்போன என்னுள்
மீண்டும்
உணர்ச்சிக் கீற்றுகள்.

என் தலைமீதிருப்பது
யாருடைய பாதம்?
என் கல்நித்திரை
ஏன் கலைகிறது?

திருவடிகளாலே
என்னை ஆசீர்வதிக்கும்
இத்தேவமகன் யார்?
என் சாபத்தைக் கரைக்கும்
இந்த வரதன் யார்?

இந்த
அமுதன் தீண்டியதும்
மீண்டும் என்
இதயம் துடிக்கிறது!
நரம்பு அதிர்கிறது!
நாளங்கள்
குருதி யோட்டத்தால்
விம்முகின்றன!” - என்று
புரியாமல்