பக்கம்:வெள்ளை யானை.pdf/31

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

41 வெள்ளை யானை

வியக்கிறாள் அகலிகை.
"தீர்க்க சுமங்கலி பவ!"
என்ற வாழ்த்தொலி கேட்டுத்
திடுக்கிட்டுத்
திரும்புகிறாள் அகலிகை.
படத்தைச் சுருக்கிய
நல்ல பாம்பாய்ச்
சினத்தை மறைத்த
விசுவாமித்திரன்.

தவக்கோலத்தைக் கண்டவுடன்
காய்ச்சிய இரும்பை
மிதித்துவிட்ட மிரட்சி அவளுக்கு.

அவளுக்குள்
விட்டு விட்டு அலறும்
குழந்தையின் குரல்.

கசங்கிய மலராகக்
கைக்குழந்தையை ஏந்திய
மேனகை
ஏக்கத்தோடு பார்க்க
கடற்குதிரையாக
முகத்தைத் திருப்பிக் கொண்ட
விசுவாமித்திர முனி
அவள் நெஞ்சை
அடைத்துக் கொண்டு நின்றான்.

தாடிக்குக் கொடுக்கும்
மரியாதையைக் கூட
தர்ம பத்தினிக்குக் கொடுக்காத தவசிரேஸ்டர்கள்' - என்று