பக்கம்:வெள்ளை யானை.pdf/32

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
முருகுசுந்தரம் 42

அவள்வாய் முணுமுணுத்தது.
என்றாலும்
முனிவர் முன்னால்
மண்டியிட்டு வணங்கினாள்.

"அகல்யா!
உனக்குச்
சாப விமோசனம்
வந்துவிட்டது.
உன் கற்பின் மீது
படிந்திருந்த களங்கம்
காலத்தால்
காய்ந்து உதிர்ந்து விட்டது.
நீ -
மீண்டும்
தளிர்க்கப் போகிறாய்”
என்றார் விசுவாமித்திரர்.

அகலிகையின்
உதட்டில்
உலர்ந்த புன்னகை.

நான்
என் வாழ் நாளில்
ஒரே ஒரு
ஆடவனைத் தான்
உள்ளத்தால் வரித்து
ஆராதனை செய்கிறேன்.

என் கற்பின்மீது
களங்கம் படிவது
எப்படி சுவாமி' - என்று