பக்கம்:வெள்ளை யானை.pdf/34

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


முருகுகந்தரம் O 44 வற்புறுத்தித் திருமணம் செய்வது ஒரு விதத்தில் கற்பழிப்புத் தானே? பாரதப் பெண்கள் பறிப்பதற்கு முன் வாய்திறக்கும் மலர்கள். பறித்தபின் பிணத்திற்குச் சூட்டினாலும் மெளனித்து மரிப்பவர்கள். தங்கள் பாத துரளியைப் பற்றிப் பெருமைப்படும் முனிசிரேஷ்டர்கள் பர்ணசாலைப் படியைக் கேட்டுவிட்டா மிதிக்கிறார்கள்?" - என்று குமுறினாள் அகலிகை. 'அகல்யா! கெளதமன் உன்னை மீண்டும் ஏற்றுக் கொள்ளத் தயாரா யிருக்கிறான் - என்றார் விசுவாமித்திரர். ‘என்னைப் பொறுத்தவரையில் அது சோர வாழ்க்கை! மீண்டும், அது எனக்கு வேண்டாம் - என்றாள் அகலிகை. 'அகல்யா! உன் முடிவுதான் என்ன? என்றார் விசுவாமித்திரர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வெள்ளை_யானை.pdf/34&oldid=916263" இருந்து மீள்விக்கப்பட்டது