பக்கம்:வெள்ளை யானை.pdf/46

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
முருகுசுந்தரம்

56


காவிரியை
ஏன்...
தெற் கெல்லையிலிருக்கும்
தாமிர பரணியைக் கூட.

கொத்தும் உன்
கொடுமையறிந்தும்
மோசக்கார
மோடி மஸ்தான்கள்
தங்கள் சட்டைப் பையில்
உன்னைத்
தாலாட்டி வளர்க்கிறார்க்ள்.

விழாக் காலங்களில்
உன்னை
வெளியில் விட்டு
வேடிக்கை காட்டுகிறார்கள்.

ஏமாளி இந்தியன்
தன்னையே கொடுத்துவிட்டுத்
தாயத்துப் பெற்றுத்
திரும்புகிறான்.

நீ -
சங்கராபரணமாக
இருந்தாலும் சரி!
பாராளுமன்றப்
பரந்தாமர்களுக்குப்
படுக்கையாக
இருந்தாலும் சரி.
உனக்கு -
மரண அடி கொடுப்பதற்குச்
சரியான ஆயுதத்தை