பக்கம்:வெள்ளை யானை.pdf/49

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

59 வெள்ளை யானைவரிக் கோடுகளாக
மாற்றிக் கொண்டிருக்கிறோம்.

நீங்கள் -
எங்களுக்குப் பூட்டிய
அடிமை விலங்குகளையே
கேடயமாகச்
செய்து கொண்டிருக்கிறோம்.

துரோகத் துரோணர்களே!
இன்றைய ஏகலைவர்கள்
கட்டை விரல்களைக்
காணிக்கை யாக்கத்
தயாராக இல்லை.
பாரதப் படையில்
அதிரதர்
மகாரதர் பதவிக்கு
அவர்களும் போட்டி போடுகிறார்கள்.

அதிகார வர்க்கத்தின்
அயோத்தி ராமர்களே!
கோதண்டத்தைக்
கீழே போடுங்கள்.
இன்றைய சம்புகர்கள்
தலை கீழாகத் தொங்கித்
தலையை
இழக்க மாட்டார்கள்,
சொர்க்கத்தில்
விகிதாச் சாரப்படி நுழைய
உரிமைப் போர் நடத்தி
வெற்றியுடன்
வந்து கொண்டிருக்கிறார்கள்.