பக்கம்:வெள்ளை யானை.pdf/50

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
முருகுசுந்தரம் 60

அரச குடும்பத்து
அருச்சுனர்களுக்கு மட்டுமே
தேரோட்டிப் பழக்கப்பட்ட
கண்ண பிரான்களே!
பாசுபதாஸ்திரம்
காண்டீபர்களுக்கு மட்டுமே
சொந்தமா என்ன ?
எங்களாலும்
அதைப் பெறமுடியும்.

நீங்கள் -
நெற்றிக் கண்ணைக்
காட்டாதீர்கள்!
இனி....
எங்களை....
உங்களால் ...
எரிக்க முடியாது!