பக்கம்:வெள்ளை யானை.pdf/62

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
முருகுசுந்தரம்72


பேசுகிறாய்.
நான் என் -
இலையுதிர் காலத்தைப்பற்றி
எண்ணிக் கொண்டிருக்கிறேன்.
நான் இல்லாமல் இருந்திருந்தால்
கோவலனும் கண்ணகியும்
நீண்டகாலம் வாழ்ந்திருப்பார்கள்.
நான் ஓர்
ஏழைப் பெண்ணின் காலில்
வெள்ளிச் சிலம்பாகப்
பிறந்திருக்கக் கூடாதா
என்று ஏங்குகிறேன்.
அவ்வாறு பிறந்திருந்தால்
வஞ்சிப்பத்தன் என்னைத்
திரும்பிக் கூடப்
பார்த்திருக்கமாட்டான்.
பாதுகையே!
நீ அயோத்தி வாசி
நான் புகார் வாசி
என்றாலும் -
நாம் இருவரும் ஒரே சாதி,
புரியவில்லையா?
நீயும் காலணி!
நானும் காலணி!
என்றாலும் -
உன் பெருமை எனக்கு வராது.
நீ-
பரத கண்டத்தின் பழைய ஜனாதிபதி.