பக்கம்:வெள்ளை யானை.pdf/67

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
சிலம்பின் இரண்டாவது வெற்றி!


பத்மினி -
என்ற பெயரைக் கேட்டதும்
பலாத்காரம்தான்
நினைவுக்கு வருகிறது.

சித்தூர் ராணி பத்மினியை
அல்லாவுதீன் கில்ஜி
பலாத்காரம் செய்ய முயன்றது
அன்றைய வரலாறு.

சிதம்பரம் பத்மினியை
அவள் கணவன் எதிரிலேயே
காவல் துறையைச் சேர்ந்த மூவர்
கதறக் கதறக் கற்பழித்தது
இன்றைய வரலாறு,

புணர்ச்சி
ஒரு மென்மையான
புனிதம்.
நான் நீயற்ற
ஏகநிலை.
பாமரர்க்கும்
எளிதில் கிட்டும்
பரமபதம்.