பக்கம்:வெள்ளை யானை.pdf/69

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
79.வெள்ளை யானை
 பலாத்காரம்செய்வதில்லை.
கற்பழிப்பு-
மனிதனுக்கே உரியது.

விஜய நகர சாம்ராஜ்யக்
காவலர்கள்.
விரும்பிய பெண்ணை
ராணி வாசப் பல்லக்கில்
ஏற்றிக் கொண்டு போய்
அரண்மனைக்குள்
அடக்க மாகக் கற்பழித்தனர்.
ஆனால்...
இந்நாட்டின் இன்றைய
காவல்துறை
காவல்நிலையத்தையே
கற்பழிப்புக் கூடமாக
மாற்றிக் கொண்டிருக்கிறது.

புவனேசுவரில்
இரண்டு பெண்கள்
பட்டப் பகலில் பாதை நெரிசலில்
துரத்தித் துரத்திக்
கற்பழிக்கப் பட்டனர்.

கர்மயோகி
விவேகானந்தர் பிறந்த
கல்கத்தாக்
காவல் நிலையத்திலும்
கசங்கிய மலர்கள்.

நல்லவேளை!
நியாயம் கேட்கக்
கண்ணகி காவல் நிலையத்துக்கு
வரவில்லை.