பக்கம்:வெள்ளை யானை.pdf/70

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


முருகுகந்தரம் 0 80 காவல் வேட்டை நாய்கள் பத்மினியைக் கடித்துக் குதறியபோது எந்தக் கண்ணபிரானும் சேலை கொண்டு வரவில்லை பத்மினியின் கணவனும் பஞ்ச பாண்டவரைப் போல் பார்த்துக் கொண்டிருக்கவில்லை; சாகும் வரை போராடினான். கணவனையும் கற்பையும் ஒருங்கே இழந்த பத்மினி கதறி அழுதபோது காவல் துறையின் இரும்புக் கரங்கள் அவள் குரல்வளையை நெறித்தன. அதையும் மீறி அவள் குரல் அரங்கத்தில் எதிரொலித்து வழக்கு மன்றத்தின் வாயிலைத் தட்டிய போது, அன்றைய தமிழக அரசு கள்ளப் பிள்ளைக் காரியாய்க் கலைக்கவும் முடியாமல் உயிர்க்கவும் முடியாமல் தவித்தது. ஓரிலக்கம் ரூபாய் கருணைத் தொகையும் ஒரு வேலையும் கொடுத்துப் பத்மினியோடு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வெள்ளை_யானை.pdf/70&oldid=916341" இருந்து மீள்விக்கப்பட்டது