பக்கம்:வெள்ளை யானை.pdf/71

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
81.வெள்ளை யானை
 சமரசம் செய்து கொள்ள
முன்வந்தது.

கருணைத் தொகையா அது?

கால்விரித்த
காவல்துறை அசிங்கத்தை
மூடிமறைக்கத்
தமிழக அரசு விரித்த
பட்டுத் துணி!

'சட்டம் ஓர் இருட்டறை!
வக்கீலின் வாதம்
ஒரு கைவிளக்கு!
என்றார் அண்ணா.

ஏழைகளுக்குக் கிடைக்காத
அந்தக் கைவிளக்கை
ஏந்திழையார் கழகம்
போராடிப் பெற்றது.

'வளையல்களின் கோரஸ்' வழக்குமன்றத்தையே குலுக்கிவிட்டது!'

கற்பழித்த காவலர்கள்
காராக்கிரகத்தில்!
கண்ணீர் உலர்ந்த பத்மினி
கல்யாண மேடையில்!

இது-
சிலம்பின்
இரண்டாவது வெற்றி!