பக்கம்:வெள்ளை யானை.pdf/72

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
அந்தப் படகுபுதுமெருகு குலையாமல்
பக்கங்கள் சரிந்து
முனைகள் கூர்த்து
அடிவயிறு வாட்டமாக
அந்த அலைத்தேர்
தனிமையில்
வெள்ளோட்டத்துக்குக்
காத்திருந்தது.

தென்றலுக்கு அசையும்
நீர்ப்பூவாக
அதன் நாட்டியம்!

துடுப்பைப் போட்டதும்
துள்ளிக் குதித்து
அலைகளைக் கிழித்து
முன்னால் பாய்ந்தது.

வானத்தின் குளிர்ந்த
அமுத கலசம் கவிழ்ந்து
அதில்...
மின்மினிப் பூக்கள்
மிதந்து வர,
கொடிமின்னல் தேவதைகள்