பக்கம்:வெள்ளை யானை.pdf/73

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
83.வெள்ளை யானை
 


கொக்கும் கூட்டம்
பறப்பதுபோல் இறங்கிவர,
குனிந்தும் நிமிர்ந்தும்
நெளிந்தும் வளைந்தும்
அலைகளின் உச்சியில் ஏறி
மேகத்தைத் தொட்டு
அடுத்தகணம்
ஆழச் சரிந்து
இலேசாகிக் களைத்து
இன்பம் வியர்க்கும்
வேளையில் -
ஒருவருக்கும் தெரியாமல்
அப்படகை,
மீளக் கரையில் சேர்த்துவிட்டு
அவசரமாக வீடு திரும்பினேன்.

இப்போது
அப்படகு
ஓடிக்களைத்து
மூட்டுக்கள் தளர்ந்து
பக்கங்கள் தேய்ந்து

பாசிச் சொறி படர்ந்து
முகத்தை மணலுக்குள்
மூடிக்கொண்டு நிற்கிறது.

யாரோ ஒருவன்
முளை அடித்துக்
கரையில் அதைக்
கட்டிப் போட்டிருக்கிறான்!
ஓ... அந்தப் படகு!

★★★