பக்கம்:வெள்ளை யானை.pdf/74

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலையுதிர் காலத்து ஏக்கங்கள்


சின்னவளே!
உன்னை எனக்கு
மிகவும் பிடித்திருக்கிறது.

உன்னை...

புறவிதழைக் கிழித்துப்
புறப்பட்ட உன்றன்
புதுமொட்டு மேனியை...
பிடிக்கும் போதெல்லாம்
கைக்கு அடங்காமல்
வரால் மீனைப்போல்
வழுக்கித் துள்ளும் உன்
வாலிபத்தை...

சீண்டும் போது
அடித் தொண்டையில்
நீகிளப்பும்
மாண்டலின் சிணுங்கலை...

விட்டால்
வெறியூட்டும் உன்
'ஹெராயின்' முத்தத்தை... எல்லாவற்றையுந்தான்...