பக்கம்:வெள்ளை யானை.pdf/75

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

85 வெள்ளை யானை
புதிய பொம்மையை
அதிசயமாகப் பார்க்கும்
குழந்தையைப் போல்
என்னைப் பார்.
இலையுதிர்த்த மரங்களையும்
தளிர்க்க வைக்கும்
உன்-
வசந்த விரல்களால்
என்னைத் தடவிக் கொடு.

வெறிநாய் துரத்தினால்
ஓடிவரும்
வேகத்தோடும் பதைப்போடும்
அச்சத்தோடும் நடுக்கத்தோடும்
என்மீது பாய்ந்து
என்னை இறுக்கிக் கொள்.

கையடக்க மணிபர்சைக்
கச்சிதமாக உன் ரவிக்கைக்குள்
பத்திரப் படுத்திக் கொள்வாயே
அதைப்போல்
என்னையும்..!

மெதுவாகச் சுழன்றடிக்கும்
தென்றல் காற்று
மல்லிகைப் புதரில் நுழைந்து
என்னவெல்லாம் செய்யுமோ
அன்ன வெல்லாம்
உன்னிடம் செய்ய
எனக்கு அனுமதி கொடு.