பக்கம்:வெள்ளை யானை.pdf/77

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


87 C வெள்ளை யானை அதுவா உனது பெயர்? எங்கோ கேட்ட பெயர் எங்கட்குப் புரியவில்லை ராம நவமியை ராவணன் கொண்டாடுதல் போல் கிருஷ்ண ஜயந்திய்ைக் கம்சன் கொண்டாடுதல்போல் எவரெவரோ உனக்கு விழா எடுக்கின்ற காரணத்தால் எனக்குள்ளே ஒரு குழப்பம். இன்று - பூதகியின் மார்பிலும் புத்தமுதம் சுரக்கிறது. சகுனியின் வாயிலும் சத்தியம் பிறக்கிறது. ஆளை விழுங்கும் மலைப் பாம்பும் இன்றைக்கு அசுணமா போல மயங்கி விழுகிறது. உண்மையே பொய்யாய் பொய்யே உண்மையாய் நிறம்மாறி நிறம்மாறி நிற்கும் இக் காலத்தில் அண்ணலே எங்களுக்குக் கானல் நீராகவன்றோ காட்சியளிக்கின்றீர்! காந்தி. காந்தியென்று எங்கோ கேட்டபெயர்! எங்கட்குப் புரியவில்லை!!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வெள்ளை_யானை.pdf/77&oldid=916355" இருந்து மீள்விக்கப்பட்டது