பக்கம்:வெள்ளை யானை.pdf/78

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
ஏனென்றால்...


என் நெற்றியைப்
பாழ்நிலம் என்று
பரிகசித்தனர்.
அதில் -
திருநீறோ
திருமண்ணோ இல்லை.

என் மார்பு கூட
அமங்கலமாகக்
காட்சியளிக்கிறதாம்;
என் உயர்ந்த சாதியை
விளம்பரப்படுத்தும்
பூணூல் அதில் இல்லை.

நான்-
கோவிலுக்கோ,
மசூதிக்கோ
மாதா கோவிலுக்கோ
சென்றதில்லை.
அதற்காக நான்
வெட்கப்பட்டதும் இல்லை.

கீதை பைபிள்
குரான்-
இவற்றைத்