பக்கம்:வெள்ளை யானை.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முருகுசுந்தரம்

18



ஓம குண்டத்தில்
குங்கிலியத்தைக்
கொட்டியது போல்
குப்பென்ற மணம்!
திரும்பிப்
பார்த்தாள்.
சுற்றியிருந்த
புதர்களும் மரங்களும்
பூத்துக் குலுங்கின.

எதிரில் ஒருபுள்ளி
கோடாகிக் கொம்பாகி
வெள்ளி ஓடமாக மாற
நடுவில் -
வண்ணத்துப் பூச்சியின்
இறக்கையே பாயாக -
நீண்ட சிப்பித் துடுப்பசைத்து,
உடம்புக்கும்
உடுப்புக்கும்
வேறுபாடு தெரியாத
தேவகன்னியர்
அவளை நோக்கி வந்தனர்.

இதற்குமுன் கேட்டிராத
ஒரு தேவகானம்
ஒரு கந்தர்வ இசை வரவேற்க
அகலிகை -
அப்படகில் ஏறினாள்.

அனுபவித்திராத
ஓர் உணர்ச்சி வெள்ளம்
அலையலையாகப் பரவி
மெல்லிய அதிர்வுகளாக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வெள்ளை_யானை.pdf/8&oldid=1312679" இலிருந்து மீள்விக்கப்பட்டது