பக்கம்:வெள்ளை யானை.pdf/80

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


1. மழை வானம் வரம். ஆகாய அமிழ்து. தரைக் குழந்தையின் தாய்ப்பால், விண்வெளியில் ஒடிக் களைத்த மேகங்கள் வழித்தெறிந்த வியர்வை. பரந்த கடலும் விரிந்த வானும் செய்து கொண்டிருக்கும் பண்டமாற்று வாணிபம். மண்ணைமணந்து கொண்ட குடியானவனுக்கு மழை, வானம் வழங்கும் வரிசை: பேழைப் பணம். காதலன் வரவுக்காகக் காத்திருந்து ஏங்கும் நட்சத்திரப் பெண்களின் கன்னத்தில் வழியும் கண்ணிர்த் துணிகள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வெள்ளை_யானை.pdf/80&oldid=916362" இருந்து மீள்விக்கப்பட்டது