பக்கம்:வெள்ளை யானை.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

95 வெள்ளை யானை


கொம்பனைய மாதவிக்கும்
வம்பப் பரத்தருக்கும்
வாரிக் கொடுத்துவிட்டுக்
கோவலன்-
வெறுங்கையோடு
நின்ற போதெல்லாம்
இந்தக் கண்ணகி மழை
பொய்யாமல் பெய்தது.

வறுமைக்கு வெட்கப்பட்டு
வாழ்தல் வேண்டிக் கோவலன்
புகாரை விட்டுப் புறப்பட்ட போது வழித்துணையாக வந்து
வாட்டத்தைப் போக்கிக்
குளிர்ச்சியாகப் பெய்தது.

முகம் தெரியாத
மூதூர் மதுரையில்
தனிமரமாகக்
கழிவிரக்கத் தீயில்
பற்றியெரிந்த கோவலனை
அணைத்த மழை
இந்த அன்புமழை.

இம்மழை-
பருவம் பார்க்காமல்
கோடையில் பெய்தது.
வசந்தத்தில் பெய்தது.
மாரியில் பெய்தது.
குளிர்காலத்திலும் கூடக்
கோவலன் விருப்பத்துக்கு
நெருங்கிப் பெய்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வெள்ளை_யானை.pdf/85&oldid=1312880" இலிருந்து மீள்விக்கப்பட்டது