பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. ஹலபேடு ஹொய்சலேஸ்வரர் சமீபத்தில் ஒரு அன்பரது பேச்சைக் கேட்டேன். அவர் இவ்வுலகில் எல்லாமே காரணப் பெயர்களாகத்தான் இருத்தல் வேண்டும் என்ற எண்ணம் உடையவராக இருக் கிறார். அ. ஆ. என்னும் தமிழ் உயிர் எழுத்து வரிசை யானாலும் சரி, இல்லை ஏ. பி. சி. டி. என்னும் ஆங்கில எழுத்து வரிசையானாலும் சரி, எல்லாமே ஒரு காரணத். தால் முறைப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த முறையைப் பற்றி அவர் பேசும்போது எல்லாம் வின்னியாசமாகவே பட்டது எனக்கு. இன்னும் சொல்லப் போனால் நண்பர் மூளையில் ஏதோ ஒரு ஸ்குரு லூஸ் போல் இருக்கிறது. என்று எண்ணவும் தோன்றியது. இதைப் போலவேதான் நம் நாட்டில் பல காரியங்கள், எல்லாவற்றிலும் காரணம் இருந்தாக வேண்டும் என்ற நியதி. இல்லை. அதனால் தானே இலக்கணம் வல்லவர், காரணப் பெயர் என்று சில வற்றைக் குறிப்பிட்டார்கள். இடுகுறி என்று சிலவற்றைக் குறித்தார்கள். இன்னும் காரண இடுகுறி என்றுமே சில வற்றைக் கூறினார்கள். மைசூர் ராஜ்யத்தில் சில கோயில். களைச் சுற்றி நாம் வருகிறபோது அவை ஹொய்சலர் கோயில்கள் என்று சரித்திரம் நமக்குச் சொல்கிறது. ஹொய்சலர்கள் என்றால் என்ன? அவர்களுக்கு ஹொய், சலர் என்ற பெயர் எப்படி ஏற்பட்டது என்று தெரிய விரும்புவீர்கள். அதற்கு விடை, சொல்கிறது ஒரு விந்தை, யான கதை. பழைய கர்நாடக ராஜ்யத்தை 11 முதல் 14-ம் நூற்றாண்டு வரை சிறப்பாக ஆண்ட மன்னர் களையே ஹொய்சலர்கள் என்று அழைக்கின்றது சரித்திர ஏடுகள். இவர்கள் ஆதியில் கிருஷ்ணன் இருந்து அரசு. புரிந்த துவாரகையில் இருந்த யாதவர்கள் என்றும் கூறு கிறது. இவர்கள் மேற்குத் தொடர்ச்சி மலைச் சரிவில்.