பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37 உள்ள சொசாவூர் என்ற இடத்தில் முதலில் வந்து குடியேறி இருக்கின்றனர். இவர்கள் சமணசமயத்தைச் சார்ந்திருக் கின்றனர். இவர்கள் தலைவன் சாலா என்பவன் காட்டிற்கு வேட்டையாடச் சென்றிருக்கிறான். அங்குள்ள முனிவர் ஒருவரைக் கண்டு தலைவணங்கி நிற்கிறான். அந்தச் சமயத்தில் ஒரு புலி அங்கு வந்து சேருகிறது. புலியைக் கண்ட முனிவர் அவர் பக்கத்தில் கிடந்த கழி ஒன்றை எடுத்து சாலாவின் கையில் கொடுத்து போய், சாலா" என்கின்றார். அதாவது அவரது பாஷையில் சாலா என்பவனே புலியைச் சாடு' என்று அதன் பொருளாம். அதன்படியே புலியைச் சாடி இருக்கிறார் சாலா. புலியைக் கொன்று தீர்க்க கழி மட்டுமே காணாது என்று தெரிந்த சாலா தன் உடைவாளையுமே உபயோகித் திருக்க வேண்டும். உபயோகித்து வெற்றியும் கண்டிருக்க வேண் டும். புலியைச் சாடும் வீரனான சாலாவைத்தானே நாம் அந்த பரம்பரையினரை கட்டிய கோயில்களில் சிலைவடி வில் காண்கின்றோம். இப்படி போய் சாலா" என்று முனிவர் சொன்னதையே தங்கள் குலப் பெயராகவும் அமைத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த போய் சாலா" நாளடைவில் ஹொய்சலா என்று மாறி இருக்கிறது என்றும் சொல்கிறார்கள். இப்படி ஹொய்சலா என்று பெயர் அமைந்தது விசித்திரம்தானே. அந்த ஹொய்சலர் என்ற பெயர், பொய் சொல்லார்’ என்ற நல்ல, தமிழ்ப் பெயரிலிருந்தும் வந்திருக்கலாம் என்று தோன்றுகிறது. எனக்கு எது எப்படியாயினும் ஹொய்சலர்கள் கர்நாடக ராஜ்யத்தை சிலகாலம் சிறப்பாக ஆண்டிருக்கிறார்கள். அவர்கள் ஆட்சியின், சின்னமாக அற்புதமான கலைக் கோயில்களை கட்டிவைத்து விட்டுப் போயிருக்கிறார்கள். அவர்கள் கட்டிய கோயில் இரண்டையுமே நாம் நமது தல யாத்திரையில் பார்த்துவிட்டோம். ஆம் சோமநாதபுரத் தையும், பேலூரையும் தான் குறிப்பிடுகிறேன். இனி அவர்களது தலைநகரான ஹலபேடில் கட்டியிருக்கும் பெரிய கோயில் ஒன்றையே பார்க்கப் போகிறோம். அந்தக்