பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 கோயிலே ஹொய்சலேஸ்வரர் கோயில் என்று பெயர் பெற்றிருக்கிறது. அது இருக்கும் இடமே ஹலபேடு. அந்த ஹலபேடு என்னும் தலத்திற்கே செல்கிறோம் நாம்இன்று. இந்த ஹலபேடு செல்ல பங்களுர் பூனா செல்லும் ரயில் பாதையில் பானாவர் ஸ்டேஷனில் இறங்கி இருபது மைல் மேற்கே செல்ல வேண்டும். பஸ்வசதி உண்டு. இல்லை காரிலேயே செல்வதனால் மைசூரிலிருந்து ஹாஸன் போய் அங்கிருந்து பேலூர் சென்று அங்குள்ள சென்னக்கேசவரை வணங்கிவிட்டு கிழக்கு நோக்கிப் பத்து மைல் வந்தால் ஹலபேடு வந்து சேரலாம். ஒரு காலத்தில் ஆம், கி.பி. 11 முதல் 14-ஆம் நூற்றாண்டுவரை இது ஹொய்சல, மன்னர்களின் தலைநகரமாக இருந்திருக்கிறது. இதனையே துவார சமுத்திரம், துவாரவதிபுதர் என்றெல்லாம் அழைத் திருக்கிறார்கள். ஆனால் இன்றோ பாழடைந்த ஒரு சிறு ஊராகவே காட்சி அளிக்கிறது. மன்னர் மாளிகை இருந்த, இடம் என்று ஒரு சிறு குன்றினைச் சொல்கிறார்கள். அதனையே பெள்ளே குட்டா என்கிறார்கள். அந்தக் குன்றின் பக்கத்திலே ஆணைகுந்தி என்று ஒரு இடம் இருக் கிறது. அங்குதான் ஹொய்சல சாம்ராஜ்யம் உன்னத. நிலையில் இருந்தபோது, யானை கட்டி வைத்திருக் கின்றார்கள். ஹலபேடில் உள்ள கோயிலுக்குச் செல்லுமுன் ஹொய்சல மன்னர் சரிதம் கொஞ்சம்தெரிந்து கொள்வது நல்லது. ஹொய்சல மன்னர்களது சரித்திரமே 1220-முதல் 1234-வரை ஆண்டஇரண்டாம் நரசிம்மனது வீரவாழ்வில் தான் ஆரம்பிக்கிறது என்று சொல்லலாம். அவனே சோழ தேசத்தின் மீது படை எடுத்து பூரீரங்கம் வரை வந்தவன். தமிழ் நாட்டோடு நல்ல தொடர்பு கொண்டவன். சோழ மன்னனான ராஜ ராஜ தேவன் என்பவரை பல்லவ. மன்னன் கோப்பெருஞ்சிங்கன் சிறை பிடித்து, சேந்த மங்கலத்துச் சிறையில் வைத்திருந்திருக்கிறான். அந்த கோப்பெருஞ்சிங்கனை இந்த வீர நரசிம்மன் போரில் வென்று ராஜ ராஜ தேவனை சிறைமீட்டிருக்கிறான்.