பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 திருக்கிறான்.அந்த முயற்சியே இன்று செயற்கை மழை என் கின்றோம். வானில் உலாவும் கார் மேகங்களிடையே ஐஸ்கட்டிகளைக் கொண்டு தூவி அதன் மூலமாக மழையைப் பெறுவதற்கு முயல்கிறார்கள். இந்த முயற்சி யில் இன்றும் மனிதன் முழு வெற்றிப் பெற்றதாக இல்லை . இதை எல்லாம் பார்க்கும்போது இதிகாச காலத்தில் மழை வருவிப்பதற்கு ஒரு நல்ல வழியைக் கண்டுபிடித்திருக்கிறார் கள்,அக்காலத்தில் உள்ளவர்கள். ஆம்அந்த ரிஷ்யசிருங்கரை அவர் இருக்கும் இடத்தைத் தேடிப்பார்த்து கூட்டி வந்து விட்டால் அவர் வந்த இடத்தில் மழை பெய்யும் என்று தெரிந்திருக்கிறார்கள். அப்படியே அவரை அழைத்து வந்து, தமக்கு வேண்டிய மழையையும் பெற்றிருக் கிறார்கள் என்று நமது பழைய இதிகாசமான ராமாயணம் கூறுகிறது. அந்த ரிஷ்ய சிருங்கரது வரலாறு சுவையானது. விபாண்டகர் என்று ஒரு ரிஷி, அவரது மகனாக ஒற்றைக் கொம்புடன் பிறக்கிறார், ரிஷ்ய சிருங்கர். பெண்களது கண் வீச்சில் விழாதவாறு விபாண்டகர் தம் மகனை வளர்க்கிறார். பையன் வளர்ந்து பெரியவனா கிறான். இந்த சமயத்தில் அங்க தேசத்தில் மழையே இல்லாது வறண்டு விடுகிறது. அங்க தேசத்து அதிபதியான ரோமபாதன் இதனால் மிகவும் கவலையுறுகிறான் மக்களைக் காக்க வகை சொல்லும்படி தன் குலகுருவைக் கேட்கிறான். அவரோ ரிஷ்ய சிருங்கரை உன் நாட்டிற்கு, வரச்செய் என்கிறார். ரிஷ்ய சிருங்கரையோ விபாண்டகர் வெளியே அனுப்பவே மாட்டார். அவரை அழைத்து வர ஒரு பெண்கள் படையே செல்கிறது, விபாண்டகரது பர்ன சாலைக்கு. வி.பாண்டகர் வெளியே சென்றிருந்த நேரத்தில் இந்தப் பெண்கள், ஆசிரமத்திற்குச் சென்று ரிஷ்ய சிங்கருக்கு சிருங்காரக் கலையில் மோகம் வரும்படி செய்து அவரை அழைத்து வந்து விடுகிறார்கள். ரிஷ்ய சிருங்கரது அடி பட்டதோ இல்லையோ அங்கதேசம் முழுவதும் மழை பெய்ய ஆரம்பித்து விடுகிறது. ரோமபாதனும் தன்