பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

95 மகளையே ரிஷ்ய சிருங்கருக்கு மணம் முடித்து அவரை தன் நாட்டிலேயே இருத்திக் கொள்கிறான். ஆம், நமக்குக் கூட இப்படி ஒரு ரிஷ்ய சிருங்கர் கிடைத்தால் வேண்டும் போது மழையை வரவழைக்கும் கலை கைவரப் பெறு வோம் அல்லவா. செயற்கை மழை முயற்சியில் இறங்க வேண்டாம்தானே. இந்த ரிஷ்ய சிருங்கரையே அயோத்தி மன்னனான தசரதன் தன் நாட்டிற்கு அழைத்து அவுரைக் கொண்டே புத்ரகாமேஷ்டி யாகம் செய்திருக்கிறார். அதன் மூலமாகவே, ராம லட்சுமணன், பரத, சத்ருக்னர் பிறந்தார்கள் என்பது இதிகாச வரலாறு. இந்த ரிஷ்ய சிருங்கர் பின்னர் இருந்து தவம் பண்ணின இடமே ரிஷ்ய சிருங்கபுரி. அதுவே இன்று சிருங்கேரி என்று குறுகியிருக் கிறது. நாம் அந்த சிருங்கேரி என்னும் திவ்ய தலத்திற்கே செல்கிறோம். இத்தலத்திற்குச் செல்ல ரயிலில் சென்றால் விமேகா ஸ்டேனில் இறங்கி52-மைல் தெற்கு நோக்கிச்செல்லவேண் டும்.காரில்செல்பவர்கள் கொப்பா என்றஇடத்திற்கு சென்று மேலும்பதினாறு மைல் சென்றால் இவ்வூர்வந்து சேரலாம். மேற்குத் தொடர்ச்சிமலைச் சரிவில் இருப்பதால், செல்லும் வழி எல்லாம் மலைத் தொடர்களும், அடர்ந்த காடுகளும் இருக்கும். மரங்கள் எல்லாம் சந்தன மரங்கள். பிரயாணம் சுகமாக மணமாகவே இருக்கும். பத்ரா வதிக்குத் தெற்கேயுள்ள தரிக்கிரே ஸ்டேஷனில் இறங்கி காரோ பஸ்ஸோ பிடித்துச் சென்றாலும் சென்று சேரலாம். இந்த ஊர் துங்கபத்ரா நதியின் இடது கரையில் இருக்கிறது. துங்கா நதியும் பத்ரா நதியும் இணைந்த பின்னரே துங்கபத்ரா என்ற பெயரோடு ஓடுகிறது என்பதை அறிந்திருப்பீர்கள். இந்த துங்கபத்ரா நதிகளைப் பற்றியும் ஒரு வரலாறு உண்டு. அன்று ஹிரண்யாட்சன் என்னும் அசுரன் பூமாதேவியையே எடுத்துச் சென்று கடலில் ஒளித்து வைத்துவிட, பூரீமந்நாராயணன் வராக வடிவில் சென்று ஹிரண்யாட்சனுடன் போர் புரிந்து