பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 சாரதையின் வடிவம் சந்தன மரத்தினால் ஆக்கப் பட்டிருந்திருக்கிறது. பின்னர் விஜயநகர மன்னர்களின் ஆலோசகராக வாழ்ந்த வித்யாரண்யர், சாரதையின் வடிவைத் தங்கத்தாலேயே செய்து வைத்திருக்கிறார். அவ்வடிவே அந்தப் பீடத்தை இன்றும் அலங்கரித்துக் கொண்டிருக்கிறது. இந்தச் சந்நதியில் நவராத்திரி பூஜை சிறப்பாக நடக்கிறது. இந்த சாரதா பீடத்திற்குப் பக்கத் திலேயே ஆதிசங்கரருக்கும் ஒரு கோயில் கட்டி வைத்திருக். கின்றார்கள். சிருங்கேரியில் கிட்டத்தட்ட நாற்பது கோயிலுக்கு. மேல் இருக்கிறது என்றாலும் இங்குள்ள கோயில்களில் எல்லாம் சிறப்பாயிருப்பது வித்யாசங்கரரது கோயில்தான். இக்கோயில் கட்டிடக்கலை அமைப்பில் சாளுக்கியர் கோயில் போல் இருந்தாலும் கோயிலின் உட்புறம் எல்லாம் திராவிட சிற்ப முறையை அனுசரித்து அமைக்கப் பட்டிருக்கிறது என்பது கூர்ந்து கவனிக்கத்தக்கது. கோயில் கிழக்கே பார்த்த கோயில் கருவறையை ஒட்டி ஒரு மண்டபம். இதைச் சுற்றி ஒரு பிரகாரம். இதற்கும். முந்திக்கொண்டு ஒரு நவரங்க மண்டபம், பதினெட்டு அடி உயரத்தில் கட்டப்பட்டிருக்கிறது. அம்மண்டபத்தில் விதானத்தில் எட்டு அடிச்சதுரத்தில் பத்மம் ஒன்று அழகாகச் செதுக்கப்பட்டிருக்கிறது. அதன் இதழ்களை கொத்திக் கொண்டிருக்கும் கிளிகள் எல்லாம் அழகு வாய்ந்தவை. கருவறையைச் சுற்றியுள்ள கோபுரங்களில் பிரம்மா, சரஸ்வதி, லக்ஷமி நாராயணன் உமா மகேஸ் வரன் வடிவங்கள் இருக்கின்றன. கிழக்கு வாயிலுக்கும் தெற்கு வாயிலுக்கும் இடையில் உள்ள சுவரில் இந்திரன், யமன், ராமர், வியாசர், துர்க்கை, சனி முதலியவர்களின் வடிவங்கள் இருக்கின்றன. இன்னும் இக்கோயிலில், விஷ்ணுவின் தசாவதாரக் கோலங்கள் பலவும், சிவனது மூர்த்தங்களான அர்த்தநாரி, திரிபுராந்தகர் வடிவங்களும் இருக்கின்றன. இன்னும் மன்மதன், அன்னபூரணி,