jô4 அதற்கு தெற்கேயும் வந்து அந்த நாடுகளையும் தன் ஆட்சியின் கீழ்கொண்டு வந்திருக்கிறார். கல்வி அறிவும், கலை உணர்வும் நிரம்பிய இந்த கிருஷ்ணதேவராயர் மிக்க திறமையாக அரசாண்டதுடன் பல கலைக் கோயில் களையும் கூடங்களையும் நிர்மாணித்திருக்கிறார். கவிஞர் களை கலைஞர்களை எல்லாம் ஆதரித்திருக்கிறார். இந்த கிருஷ்ணதேவராயர் ஆட்சிக் காலத்தில் பாரசீகத்திலிருந்து வந்த தூதுவர் அப்துல் ரஸ்ாக் என்பவர், விஜயநகரத்தின் சிறப்பையும் கிருஷ்ணதேவராயரது ஆட்சித் திறமையையும் பற்றி விரிவாக எழுதி வைத்திருக்கிறார். கிருஷ்ணதேவராயருக்குப் பின் வந்த விஜயநகர அரசர்கள் திறமையுடையவர்களாக இருக்கவில்லை. அச்சமயத்தில் பாமினி சுல்தான்கள் பலரும் ஒன்று கூடி விஜயநகர மன்னரை எதிர்த்திருக்கிறார்கள். தலைக் கோட்டை என்னுமிடத்தில் நடந்த பெரும் போரில், இந்த விஜயநகர மன்னர் தோற்கடிக்கப்பட்டிருக்கிறார். அதன் பின் அவர்கள் விஜயநகரமான தலைநகரில் புகுந்து அங்குள்ள கட்டிடங்களை இடித்து தரைமட்டமாக்கியிருக் கின்றனர். இவர்கள் கலைஉணர்வு அற்றவர்கள் என் றாலும், அங்குள்ள கோயில்களை முழுதும் அழிந்து போகுமாறு சிதைக்கவில்லை. அப்படி இவர்களது கொடுமைக்கு தப்பிய கோயில்களும், அழிக்கப்பட்ட சின்னங்களுமே இன்றும் ஹம்பியில் தலைதுாக்கி நின்று விஜய சாம்ராஜ்யப் பெருமையை நமக்கு உணர்த்து. கின்றன. நாம்தான் சென்ற வாரத்திலேயே விபோஷர், கோதண்டராமர், அனந்தசயனர் முதலியோருடைய கோயில்களை எல்லாம் பார்த்து விட்டோமே! இன்று நமது சுற்றுலாவை விட்டலர் கோயிலிலிருந்து துவங்கலாம். துங்கபத்திரை நதியின் தென்கரையில் விட்டலர் கோயில் இருக்கிறது. ஹம்பியில் உள்ள கோயில்களில் எல்லாம் பெரியதும் சிற்ப, சிறப்பு வாய்ந்ததும் இந்தக் கோயில்தான். 500 அடி நீளமும் 310 அடி அகலமும்
பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/119
Appearance