பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 யுடன் கூடிய பெரிய கட்டிடம். மாடிக்கு ஏறுவதற்கு படிகள் எல்லாம் கட்டியிருக்கிறார்கள். இதை ஒட்டியே ஹஸ்ரே ராமர் கோயில் இருக்கிறது. இக்கோயில் விஜயநகர மன்னர்களின் சொந்தக் கோயில். சுவர் எல்லாம் சிற்பவடிவங்கள் ராமாயணக் கதை முழு வதையுமே சிற்பமாக வடித்திருக்கிறார்கள். சிற்பிகள் இங். குள்ள தூண்கள் எல்லாம் நிறைந்த வேலைப்பாடு உடை யவை. அவை தாங்கி நிற்கும் விதானங்களும் அழகானவை, இக் கோயிலையும் கிருஷ்ண தேவராயரே 1513-ல் கட்டி னார் என்பர், சிற்ப வல்லுநர், இக்கலைக் கோயிலைக் கண்டு.அப்படியே அதிசயித்து நிற்கின்றனர் இன்னும். இக் கோயிலை அடுத்தே அந்த சாம்ராஜ்யத்தின் தங்கசாலை இருந்திருக்கிறது. இங்கிருந்து கொஞ்சம் கிழக்கு நோக்கிச் சென்றால் ரங்கசாமி கோயிலுக்கு வருவோம். இது அவ்வளவு பெரிய கோயில் அல்ல என்றாலும், இங்கு ஒன்பதடி உயரத்திற்கு அனுமார் நின்று கொண்டிருப்பதை காணாமல் மேற் செல்லலாமா? இதற்குப் பக்கத்திலேதான் யானை கட்டும் தறி எல்லாம் இருந்திருக்கிறது இந்த வட்டாரத்தில் ஒர் இடம், மன்னர்களது கொலு இருக்கை ஒன்று இருக்கிறது. கிட்டத்தட்ட எழுபது அடி சவுக்கமாக அமைந்த இந்த கட்டிடத்தையே மகா நவமி திப்பா என்கின்றனர். இங்கு தான் மன்னர்கள் சிம்மாசனத்தில் அமர்ந்து கொலு நடத்தியிருக்கிறார்கள். மகா நவமியில் தர்பார் நடத்தியது எல்லாம் இங்கேதான். இந்த திப்பாவை கிருஷ்ண தேவராயர் தனது கலிங்க வெற்றிச் சின்னமாகக் கட்டி யிருந்திருக்கிறார். அங்கேயே வெற்றி விழாவையும் கொண்டாடி இருக்கிறார். விஜய நகரத்தின் வெற்றிச் சின்னமான இந்த தசராதிப்பா இன்று மொட்டையாகச் சிதைந்து நிற்கிறது.