பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

109 இவற்றை எல்லாம் பார்த்துவிட்டு இன்னும் வடக்கு நோக்கிச் சென்றால் வழியில் ஒரு சிறு கோயிலைப் பார்ப் போம். அதுவே வீரபத்திரர் கோயில், அதையும் கடந்து கொஞ்சதுரம் சென்றால் ஒரு சிறு பாதை மேற்கு நோக்கிச் செல்லும். காரிலிருந்து இறங்கி அந்த வழியில் சென்றால் அங்கு ஒரு பிரம்மாண்டமான நரசிம்மர் சிலையைக் காண் போம். பதினைந்து அடி உயரத்திற்கு மேல் அமைந்த பிரபையுடன் இருக்கும். இந்த நரசிம்மர் கூறை இல்லா வீட்டில் குடியிருக்கிறார். கால்கள் எல்லாம் உடைந்து கிடக் கின்றன என்றாலும் அவர்முகத்தின் உக்கிரம்குறைந்ததாக இல்லை. சிற்ப உலகிலே தனிப்பெருமை வாய்ந்த வடிவமாக ஒரே கல்லில் உருவான இந்த நரசிம்மரை வணங்கிவிட்டு வடக்கே திரும்பினால் குகை போன்ற ஒரு சிறு மண்ட பத்தில் பெரிய சிவலிங்கம் ஒன்றிருக்கும். அவரும் அவரது ஆவுடையாரும் பாதிக்குமேல் நீருக்குள் முழுகியே இருப்பர். அவரை ஜலகண்டடேஸ்வரர் என்று கூறுகிறார் கள். பெயருக்கு ஏற்ப எப்போதும் தண்ணிரில் மூழ்கியவ ராகவே இருப்பார் இவர், இந்த் நரசிம்மர் ஜலகண்டடேஸ் வரருக்கும் கொஞ்சம் வடபுறம்தான் கிருஷ்ணன் கோயில் இருக்கிறது. பெரிய மதில்களோடு கூடிய இந்தக் கோயில் மிகவும் சிதைந்திருக்கிறது. இக்கோயிலில் நுழைய நமக்குத் தைரியம் வராது. ஏனென்றால், அக்கோயிலின் மண்டபக் கற்கள் எல்லாம், யார் தலைமீது விழுவோம் என்று இன்னும் தொங்கிக்கொண்டிருப்பதாகவே தோன்றும். ஆத லால் எட்டியிருந்தே இந்தக் கோயிலைப்பார்த்துவிட்டு அப் படியே சென்றால் நாம் முதல் முதல் ஹம்பி நகரத்திற்குள் நுழைகிறபோது நம்மை வரவேற்ற அந்த சசிவேகல்லு பிள்ளையார் சந்நிதிக்கே வந்து சேருவோம். ஆம். இதுவரை நாம் ஒன்பது சதுரமைல் பரப்பில் உள்ள விஜயரநகரத்தினையே அல்லவா சுற்றி வந்திருக்கிறோம். விஜயநகர சாம்ராஜ்யத்தின் பெருமை எல்லாம் அந்த சாம்ராஜ்யத்தில் ம ன் ன ன க இருந்த கிருஷ்ண